இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன் முதல் ஏடு வரை...

சிறிது குழப்பமான தலைப்புதான். என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த இடுகையைப் படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே! ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘ கிப்ளிங் முறை ’ (Kipling Method) பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன் . அது என்ன ' கிப்ளிங் முறை ' என்று உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது . Rudyard Kipling - எனது ஆதர்ச கவிஞர், எழுத்தாளர் . தலைவலி வந்தால் மருந்தை உட்கொள்வது போல , எப்போதாவது மனவலி வந்தால் அவருடைய 'IF' என்கிற கவிதைதான் எனக்கு மருந்தே ! என்னைப் பொறுத்தவரையில் , IF - உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று . அவரது "The Elephant's Child" கதையில் வரும் “ I KEEP…“  என்கிற கீழ்வரும்  கவிதைதான் கிப்ளிங் முறைக்கு அடிப்படையாக அமைந்தது . I KEEP six honest serving-men  (They taught me all I knew); Their names are What and Why an

தீபாவளி - ஒரு FLASHBACK...

தீபாவளி அன்று மாலை , லூவன் நகரில் இருக்கும் நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு மனைவி, மகன் சகிதம் சென்று, வாழ்த்துக்களையும் இனிப்பு பதார்த்தங்களையும் வழங்கி, ஒவ்வொரு வீட்டிலும் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த போது மணி பத்து. ஹீட்டரை பொருத்திவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினேன். அவ்வளவுதான், என் மனம் கிட்டத்தட்ட ஒரு இருபது தீபாவளிகள் பின்னோக்கி, மின்னல் வேகத்தில் பாய்ந்து பயணித்தது. குறிப்பு : இதற்குப் பின்வரும் பகுதியைப் படிப்பதற்குப் முன்பு, சில மணித்துளிகள் நீங்களும் கண்களை மூடி, உங்கள் சிறுவயது (12-14) நாட்களை எண்ணிப் பார்க்க முயலவும்; பின்னர் அதே மனநிலையில் இந்த விடுகையைத் தொடர்ந்து வாசிக்கவும். அப்போதெல்லாம் நாங்கள் தீபாவளி கொண்டாடியதில்லை. (இப்போதும்  அப்படித்தான் - என் ஊருக்குச் சென்றால் தீபாவளி கொண்டாடுவதில்லை.) என் தந்தை ஒரு தீபாவளியன்றுதான் அவருடைய தாயாரையும், இரண்டு சகோதரர்களையும், அந்த சமயத்தில் பரவிய ஒரு வகையான விஷக்காய்ச்சலுக்குப்  பறிகொடுத்துவிட்டார் என்றும், அன்றிலிருந்து அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை என்றும் என் தாயா