இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவை நிச்சயம் இருக்கும்!

படம்
நன்றி : திருப்பத்தூர் முகநூல் பக்கம் இடம் : ராஜீவ் காந்தி மைதானம், திருப்பத்தூர் இதோ   இந்தப் புகைப்படத்தில் தெரியும்   இதே ஊரில் ..  இதே மைதானத்தில் ..  வௌவாலாய்த் தொங்கி வானமும் பூமியும் மலையும் மரங்களும்    கண்டு ரசிக்கும்   அந்த வீரச்சிறுவனைப் போல் ஒரு காலத்தில் தொங்கியவன் நான் .. உண்மை ! அதோ அங்கே கூட்டமாய்க்    கூடி மட்டைப்பந்து விளையாடும் அந்தப் பொடியன்களில் ஒருவனாய் பந்தை அடித்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தவன் நான் .. உண்மை ! எங்கெங்கோ சென்றேன் எவரெவரையோ கண்டேன் எத்தனையோ தோல்விகள்   எத்தனையோ வெற்றிகள்   எத்தனையோ சோதனைகள்   எத்தனையோ சாதனைகள்   எத்தனையோ கற்றேன்   எத்தனையோ இழந்தேன் எத்தனையோ பெற்றேன் உண்மை . இன்று , உலகின் ஏதோ ஒரு மூலையில்   இருக்கிறேன் நான் என்னவோ நிமிர்ந்து பார்க்க முயற்சிக்கிறேன் உலகம் ஏனோ இன்னும் தலைகீழாகவே தெரிகிறது ! உண்மை ! நான் என்னவோ நின்றுகொண்டு தானிருக்கிறேன் உலகம் எதற்காகவோ எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறது ! உண்மை ! அன்புச் சிறுவனே , நீ அங்கேயே தொங்கிக்