இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாலி..

படம்
காலன் பறித்த கால் ......................................... உயிரைப் பறித்தல்லவோ பழக்கம் உனக்கு? அட, காலா! என் தமிழ்த்தாயின் ஒற்றைக் காலை வெட்டிச் சென்றதேனோ? வலி! வலி! வலி! நெஞ்சில் 'வாலி'! வாலி! வாலி! வாலி! நெஞ்சில் 'வலி'!

அமைதிகளின் சத்தங்கள்..

படம்
இரைச்சல் விழுங்கிய இசையின் அமைதி.. பெரும்கூட்டத்தில் சிக்குண்ட தனிமைவிரும்பியின் அமைதி.. மூடத்தனங்களுக்கு இடையே மேதைமையின் அமைதி.. இருளுக்குள் ஒளிந்துகொண்ட ஒளியின் அமைதி.. ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே அடக்கமானவனின் அமைதி.. உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே ஒடுக்கப்பட்டவனின் அமைதி.. துரோகிகளுக்கு இடையே தூயநட்பின் அமைதி.. பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட உண்மையின் அமைதி.. குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே நிறைகுடத்தின் அமைதி.. இயந்திரங்களுக்கிடையே இயற்கையின் பேரமைதி.. வெட்டிப்பேச்சுகளுக்கிடையே உழைப்பின் அமைதி.. ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே எளிமையின் அமைதி .. பிற சத்தங்கள் அனைத்துமென் செவிப்பறையை கிழித்து செவிடனாக்கிவிட அத்தனை அமைதிகளின் சத்தங்களும் தெளிவாகக் கேட்கத்தொடங்கின.. 'அமைதியடைந்தேன் நான்'! (எண்ணத்தூறல்)

மர்ம பாலம்

படம்
அது ஒரு நீண்ட பாலம். அவனொரு விந்தை மனிதன். பாலத்தை கடக்க அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய் மகிழ்வுற்றான் - வாழ்த்தினான். பாலத்தை கடந்து விலகிப் போன ஒருவனுக்காய் துயருற்றான் - பிரார்த்தித்தான். பாலத்தின் நடுவே கடக்கவியலாமல் அயர்வுற்று விடைபெற்ற வேறொருவனுக்காய் மீளாத்துயருற்றான். பிரார்த்தித்தான். அவனும் அதே பாலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் நின்றுகொண்டு தெளிவாகத் தெரியுமந்த பாலத்தின் மறுமுனைக்கும் தனக்குமான தூரத்திற்கு எதிர்காலம் எனப்பெயர் வைத்து, அது வருவதற்குள் முடித்துவிட ஒரு நீண்ட பட்டியலொன்றை தயாரித்தான். எண்ணற்ற கனவுகளும் எண்ணற்ற கவலைகளும் எண்ணற்ற எதிர்பார்ப்புகளும் எண்ணற்ற ஏக்கங்களும் எண்ணற்ற திட்டங்களும் எண்ணற்ற குறிக்கோள்களும் நிறைந்த பட்டியல் அது. பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை தன் தலையில் சுமந்துகொண்டு பாலத்தின் மறுமுனை நோக்கிய தன்னுடைய பயணத்திற்கு வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான். எண்ணற்ற உறவுகளும் எண்ணற்ற துரோகங்களும் எண்ணற்ற மகிழ்ச்சிகளும் எண்ணற்ற துயரங்களும் எண்ணற்ற சாதனைகளும் எண்ணற்ற சோதனைகளும் எண்ணற்ற அனுபவங்களும் எண்ணற்ற பாடங்களும் ந

முடிதிருத்தகமும் மனிதமும்..

இப்போதுதான் லூவன் நகர ப்ரசல்சு தெருவிலுள்ள ஒரு முடிதிருத்தகத்திலிருந்து வருகிறேன். சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று - 'முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது'. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 'உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.' என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன். ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை 'Tonsorial Artist' என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. ;-) இன்று நான் சென்று வந்

'ப்ரமான் சூபியங்க'

படம்
ஆன்டன் செக்கோவ்  உடன்  மாக்சிம் கோர்கி அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக  ப்ரசல்சு  நகரம் செல்ல வேண்டியிருந்தது. லூவன் எகானோம் டாக்சி  நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன்  கோனிங்கு போடெவெய்ன்லான்  நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி. 'ஹுய மார்ஹன்' என்பதற்குப் பதிலாக 'குட் மார்னிங்' என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம்  ஃபிளம்மியர்  இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது. "ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?" என்று கேட்டேன். "இல்லை, ரஷ்யா!" என்று கூறியவர், "தாங்கள் பாகிஸ்தானியா?" என்றார். "எப்படி இருவருமே 'சரியாக' தவறாகக் கேட்கிறோம்?" என்று நினைத்துக்கொண்டே, "இல்லை, இந்தியன்!" என்றேன். சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, "தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?" என்று கேட்டார். "இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு." என்றேன்.