இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் தேன்குழல் சிறுகதைத் தொகுப்பு - அகநாழிகை வெளியீடு

படம்
இ துகாறும் நான் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பை ' அகநாழிகை பதிப்பகம் ' வெளியிட இருக்கிறது.  இந்த நற்செய்தியை நண்பர்களிடம்  பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். தொகுப்பிலுள்ள  பெரும்பான்மையான சிறுகதைகள் வல்லமை இதழில் வெளிவந்தவை. வல்லமை என் முகவரியின் முதல் வரி என்றால் அதில் துளியும் மிகையில்லை.  சில சிறுகதைகள்  சொல்வனம், திண்ணை மற்றும் சிறகு இதழ்களில் வெளியானவை. ஓரிரு கதைகள் பிரசுரமாகாதவை .  உண்மையில் நான் ஒரு வாசகன் மட்டுமே. என் எழுத்து ஒரு கிளைவிளைவே. என்னுடைய நண்பர்கள் குழுவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதாக எண்ணிவிடலாம். இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற ஏகலைவன்களுக்கு, துரோணர்களின் புத்தகங்களே குருநாதர்கள்.  எனக்குத் தெரிந்த பலர் புத்தகத்தை எடுத்தால், வெகுவிரைவாக படித்து முடித்து விடுகிறார்கள். என்னாலெல்லாம் அவ்வளவு வேகமாக வாசிக்க முடியாது. ஒரு புத்தகத்தைப்  வாசித்துக்கொண்டு இருக்கும் போதே பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அதன் பின்னால் கிடுகிடுவென சிறிது நேரம் ஓடினால், அது தொடர்பான கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் என் முன்னே வந்து கொட்டும்.

அம்மாவின் தேன்குழல் - என் முதல் சிறுகதைத் தொகுப்பு

புகைவண்டிகள்

க டுங்குளிர். இன்று காலை ஒருவித இறுக்கத்தோடு பேருந்தைப் பிடிக்க நடந்து சென்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு குட்டிப் பெண் தன் தாயின் கையைப் பிடித்தபடி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். என் மகனின் நினைவு வந்தது. இந்தக் குளிரில் குழந்தைகளுக்கு என்ன பள்ளி வேண்டிக்கிடக்கிறது என்று தோன்றியது. அந்தக் குழந்தை வானத்தைப் பார்த்தபடி வாயிலிருந்து புகை விட்டுக்கொண்டே சென்றாள். அவளைக் கடக்கும் போது பார்த்து புன்னகைத்து, 'ஹுய மார்கன்' என்றேன். 'ட்ரேன்..ட்ரேன்..' (புகைவண்டி) என்றாள். இந்தக் குழந்தைக்குப் புகைவண்டியைப் பற்றி எப்படித் தெரியும் என்று யோசித்தேன். என் மகன் அடிக்கடி பார்க்கும் 'ஆங்கில எழுத்துக்களை' பெட்டிகளில் எடுத்துச் செல்லும் புகைவண்டியின் நினைவு வந்தது.  சில நொடிகளில் என்னையும் அறியாமல் நானும் வானத்தைப் பார்த்தபடி புகை விட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். எத்தனை அருமையான விளையாட்டு!! குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது என்று தோன்றியது. குழந்தையாக மாறிவிட வேண்டும் என்று தோன்றியது. இறுக்கம் நீங்கி புத்துணர்வு பெற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பேருந்து ந

முடி

படம்
(சிறுகதை) இ ன்னும் சில நாட்களில் மொத்தமாய் கொட்டித் தீர்ந்துவிடும். ஏற்கனவே பின்மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது. முன்மண்டை தற்காலிகமாகத் தப்பி நிற்கிறது. தற்போது எனக்கிருக்கும் தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த முடிப்பிரச்சினை தான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.  எனக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால், ‘இருபத்தைந்து இருக்கும்’ என்று கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் ‘நாற்பதுக்கு மேல் இருக்கும்’ என்று உறுதியாகக் கூறுவார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பர

'முடி' சிறுகதை - சொல்வனம் பெண்கள் சிறப்பிதழ்

படம்
சொல்வனம் இணைய இதழ் - இசை, தி. ஜானகிராமன், க.நா.சுப்ரமண்யம், ஐந்தாம் ஆண்டு நிறைவு, அசோகமித்திரன் மற்றும் சிறுகதைச் சிறப்பிதழ்களைத் தொடர்ந்து, 115-ஆவது இதழை  பெண்கள் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளார்கள். அதன் நீட்சியாக வெளிவந்துள்ள இதழ் 116-இல் என்னுடைய சிறுகதை ' முடி ' இடம்பெற்றுள்ளது. ' முடி ' சிறுகதைக்கான இணைப்பு: http://solvanam.com/?p=36766 என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானதொரு கதை. வாசிப்புக்கு நன்றி!

அணைக்கப்படாத கைபேசி

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பன் ஒருவனைத் தொலைபேசியில் அழைத்தேன். நீ நலமா? நான் நலம். வாழ்க்கை எப்படி? அது சுகம். இங்கும் அதே. வேலை எப்படி? எப்போதும் போல் நன்றாகவே செல்கிறது. இங்கும் அப்படியே. பிள்ளைகள் வேகமாய் வளர்கிறார்கள். அதே அதே. சென்னையில் மழை. பெல்கியத்தில் வெயில். சென்னை வந்தால் சந்திக்கவேண்டும். கண்டிப்பாய். அடிக்கடிப் பேசவேண்டும். இப்படியே. விடைபெற்றுக்கொண்ட நண்பன் அழைப்பதுபோல் உணர்ந்து மீண்டும் கைபேசியை காதோடு அணைத்தேன். பதினைந்து நிமிடங்கள் அவன் சொல்லாத துயரங்களையும், மறைத்த வலிகளையும் மூன்று நிமிடங்களில் விரிவாக எடுத்துரைத்தது நண்பனின் அணைக்கப்படாத கைபேசி. (முகநூல் நிலைத்தகவல்-18/10/2014)

கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

படம்
லூ வன்   நகர உள்வட்ட சாலையில் அமைந்த   கபூசேனபூர்   பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது .  நிறுத்தத்தை   ஒட்டி இருக்கும்   பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில் , ஒரு சிறு பெட்டி தான் என்   வீடு . டச்சு மொழி தெரியாதவர்கள் , இந்த இடத்தின் பெயரை   கபுசிஜ்னென்வோர்   என்று உச்சரித்து இந்த ஊர் மக்களின் ஏளனச் சிரிப்பைப்   பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள் . ஆரம்பகாலத்தில்   நானும் நிறைய முறை இப்படிப்பட்ட   பரிசுகளை வென்றிருக்கிறேன் . பேருந்து நிறுத்தங்களால் சூழப்பட்ட எங்கள் குடியிருப்பின்   மறுபுறம் இருக்கும்   ரெடிங்கனாப்   நிறுத்தத்தில் என்னுடைய   அலுவலகத்திற்கு   செல்லும் 7, 8, 9 எண் பேருந்துகளில் ஒன்றைப் பிடிப்பது வழக்கம் . ஆனால் அன்றைக்கு இரயில்   நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இருக்கும்   லூவன்   நகராட்சி மன்றத்துக்கு செல்லவேண்டி இருந்ததால் உள்வட்ட சாலைப் பேருந்தான  601- ஐப் பிடிக்க நினைத்தேன் . வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே 601- இன்   பின்புறம் தெரிந்தது