இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்..

படம்
குறிப்பு :  வல்லமை கடித இலக்கியப் போட்டிக்காக எழுதியது.  போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று இசைக்கவி இரமணன் அவர்களால் விமர்சிக்கப்பட்டது.  சிறுகதையாகக் கருதி வாசிக்கவும். கலாரசிகை மணிமொழிக்கு , வணக்கம் . தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன் . உண்மையிலேயே பேருவகை அளித்த மடல் . உங்கள் கடித்தத்தைப் படித்து முடித்தவுடன் , சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதையில் லாட்டரியில் பரிசு கிடைப்பதற்கான சாத்தியம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது - “ ஒரு குரங்கு டைப் அடிக்கற இயந்திரத்துக்கு முன்னால் உட்கார்ந்துவிட்டு , தக்கா புக்கான்னு அடிச்சு , அடிச்ச விஷயம் அகஸ்மாத்தா கம்பராமாயணத்தில் ஒரு பாட்டா அமையதறதுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கோ , அவ்வளவு சான்ஸ் தான் இந்த லாட்டரியில .. ” என்று எழுதியிருப்பார் . என்னைப் பொறுத்தவரையில் , என் போன்ற ஓவியர்களுக்கு இதுபோன்ற கடிதங்கள் வருவதென்பதும் , லாட்டரியில் பரிசு விழுவதென்பதும் ஒன்று தான் ! என்னை ‘ தக்கா புக்காவென தட்டச்சும் குரங்கு ’ என்று   சொல்லிக்கொள்ளவில்லை . உங்களைப் போன்ற கலாரசி ( கர் ) கைகள்