இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அ..ஆ..இ..

படம்
மனிதனின் இடுப்புச் சுற்றளவு - 0.001 கிலோ மீட்டர் ( என்று வைத்துக்கொள்வோம் )   பூமியின் சுற்றளவு - 40075 கிலோமீட்டர்   வியாழ னின்   சுற்றளவு - 448969 கிலோமீட்டர்   சூரியனின் சுற்றளவு - 4368175 கிலோமீட்டர்   ரைஜலின் சுற்றளவு - 340717650 கிலோமீட்டர்   மு - செபேயின் சுற்றளவு - 2839313750 கிலோமீட்டர்   கேனிஸ் மேஜோரிசின் சுற்றளவு - 6202808500 கிலோமீட்டர்   இப்படி விரிந்துகொண்டே போகிறது பிரபஞ்சம் ...   மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த நட்சத்திரத்தை விட 6202808500000 மடங்கு சிறிய இந்த மனிதனாகிய எனக்கு ஏன் இவ்வளவு அ .. ஆ .. இ .. இன்னொரு மனிதனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து ?   அகம்பாவம் ... ஆணவம் ... இறுமாப்பு ...! அந்த மனிதன் ஒருவேளை   அந்த   நட்சத்திரத்தை     விட  ஒரு 6202808500000.01 மடங்கு சிறியவனாக இருப்பானா ? தூசு நான் ! ஒருநாளும் என்னை கேலி செய்ததில்லை என் பிரபஞ்ச அன்னை என் சிறுமை கண்டு !   எனக்கு ஏன் இவ்வளவு அகம்பாவம் ..  ஆணவம் ..  இறுமாப்பு ..? நன்றி: வல்லமை

நிறங்கள் – ஒரு பார்வை

படம்
அது நான் தினந்தோறும் சென்றமர்ந்து ஓய்வெடுக்கும் பூங்கா. காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசிமுறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக்கச்சேரி தான்! அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்துகொண்டது சிறுதூறல்! அதன் விழைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த 'மிதம்', அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும்  யாருக்குப் பிடிக்கும்? மிதம் தான் இதம். வெயிலுக்கும் மழைக்கும் இடையே சிலமணித்துளிகள் நான் சிக்குண்டு   லயித்துக் கிடந்த போது, என் செவிகள் 'சிறுவர்கூட்ட வாத்திய அமைப்பில்' ஏற்பட்டதொரு பெருமாற்றத்தைக் கண்டுகொண்டு மேலும் கூர்மையானது. '

வன்முறை

என்னுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - தாவரங்கள் எனக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை உன்னுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - கால்நடைகள் உனக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி உனக்குக் கவலையில்லை அவனுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் - நீயும் நானும் அவனுக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி அவனுக்குக் கவலையில்லை

பிரம்மாவைக் கண்ட நாள்…?

படம்
இந்தக் கதையின் தலைப்பில் நான் குறிப்பிட்டிருக்கும் ‘இந்த பிரம்மா யார்?’ என்று உங்களுக்கு நிச்சயம் கேள்வி எழுந்திருக்கும். அவர் வேறு யாருமல்ல; படைப்பின் கர்த்தாவான பிரம்மதேவனே தான்! ‘பிரம்மாவைக் கண்ட நாளா? இது என்ன கட்டுக்கதை? யார் இந்த மனிதர்?’ என்றெல்லாம் நீங்கள் கேட்பது எனக்கு டெலிபதி மூலம் வந்தடைந்து விட்டது. முதலில் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு கதையை தொடர்கிறேன். ‘யார் இந்த மனிதர்?’  நான் யாரென்பதைச் சொல்லி யாருக்கு என்ன ஆகிவிடப்போகிறது?  தமிழகத்தின் ஏதோ ஒரு சிறிய  நகரத்தில் பிறந்து, வளர்ந்து, தற்போது அமெரிக்காவில் நாசாவில் பணிபுரிந்துகொண்டு, சிறுவயது அனுபவங்களை எல்லாம் அசைபோட்டு வாழ்ந்து  கொண்டிருக்கும் ஒரு விஞ்ஞானி. இது என்ன கட்டுக்கதை? நான் தான் விஞ்ஞானி என்று கூறிவிட்டேனே! உங்களைக் காட்டிலும் கட்டுக்கதைகளை வெறுப்பவன் நான். இது கதையா? இல்லையா? என்பதை முடிவெடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்! பிரம்மாவைக் கண்ட நாளா? இதற்கு நான்கைந்து வரிகளில் எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. பிரம்மாவின் பெயர் வந்துவிட்டதால், இதற்கு ஆன்மீகக் கதை என்று முத்த

வெகுதொலைவில்..

அது ஒரு நதிப்பிரவாகம் . அதன் கரையோர மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்த   இலையென விழுந்தேன் .. அடித்துச் சென்றது பிரவாகம் . இருப்பினும் எப்படியோ சுழிக்குள் சிக்காமல்   சிதையாமல் மூழ்காமல் லாவகமாய் அதன்மேலே தவழ்ந்து சென்று வேறேதோவோர் கரையில்   ஒதுங்கியபோதுதான் உணர்ந்தேன் - ' என்னை விட்டு நான் வெகுதொலைவு வந்துவிட்டதை !'. ( எண்ணத்தூறல் - 6 )

பின்னடைவு..

ஒரு சாதனைக்குப் பிறகு .. குடும்பம் குதூகலிக்கிறது . தோள்கொடுத்த நட்பு பெருமைப்படுகிறது . சான்றோர் சபை விமர்சிக்கிறது . பகைமை பொறுமுகிறது . அனுபவம் அமைதிகாக்கிறது . அறியாமையும் அமைதிகாக்கிறது .   ஒரு பின்னடைவுக்குப் பிறகு .. ' அத்தனையும் அறிவுரை கூறுகிறது .'   ( எண்ணத்தூறல் - 5 )