வன்முறை
என்னுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - தாவரங்கள்
எனக்குத்தான் அது கேட்பதில்லை
கேட்டாலும் அதுபற்றி
எனக்குக் கவலையில்லை
உன்னுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - கால்நடைகள்
உனக்குத்தான் அது கேட்பதில்லை
கேட்டாலும் அதுபற்றி
உனக்குக் கவலையில்லை
அவனுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் - நீயும் நானும்
அவனுக்குத்தான் அது கேட்பதில்லை
கேட்டாலும் அதுபற்றி
அவனுக்குக் கவலையில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக