இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அது பணக்காரர்களுக்கான தேசம்..

சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை ஒவ்வொரு வருடமும் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். "நீ எப்போது இங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்" என்றேன். "இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?" என்றார். "வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்." என்றேன். "இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?" "நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம் பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லி

கடவுள்

உலகின் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் கடவுள் இல்லை. கடவுளைக் கண்டுபிடித்த மற்றும் அந்தக் கடவுள் இல்லவே இல்லை என்று மறுத்துக்கொண்டும் இருக்கின்ற - இந்த மனிதர்கள்தான். ஒருநாள் உலகமே கூடி கடவுளே இல்லை என்று முடிவு எடுத்து, அனைவருமே நாத்திகர்களாகி விட்டால், அதே நாளில் உலகத்தின் அத்தனை சிக்கல்களும் காணாமல் போய்விடப் போவதில்லை. உலகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையோடு சுபிட்சமாய்  வாழ்ந்துவிடவும் போவதில்லை. கடவுளுக்கு பதிலாக இன்னொரு கோட்பாடு உருவாகி இருக்கும். அதை சார்ந்தும், எதிர்த்தும், ஒன்றும் புரியாமல் இடையிலும் என்று மூன்று வகையாக உலகம் பிரிக்கப்படும். சார்ந்து இருப்பவர்களுக்குள்ளேயே ஒரு நூறு கூட்டங்கள் உருவாகும். ஆனால், ஒன்று முக்கியம். ஒருவர் கடவுள் நம்பிக்கையுடையவரா, மறுப்பாளரா என்பதை மட்டும் வைத்து , அவர் அறிவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வதில்லை. இரு புறங்களிலும் மிகச்சிறந்த அறிவாளிகளைச் சந்தித்திருப்பதால் எடுத்த முடிவு இது. இரு புறங்களிலும் மூடர்களை கண்டிருப்பதாலும்தான். கடவுள் மறுப்பு மட்டுமே பகுத்தறிவு என்பது போன்ற பிதற்றல்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. Being a rational

நாடோடியும், நான்-ரெசிடண்ட் இந்தியனும்..

(சிறுகதை) எ ன்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. இந்தியாவின் ஏதோவொரு கிராமத்தில் பிறந்து,  நகரத்திற்கு இடம்பெயர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, உலகின் ஒரு சிறுபகுதியேனும் சுற்றிவிட்டு தற்போது ஐரோப்பாவின்  ஹாலந்து  நாட்டின்  மாஸ்ட்ரிக்ட்  எனும் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒரு என்.ஆர்.ஐ ஆசாமி. விடிந்தால் தீபாவளி. ஆனால், மறுநாள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால், முந்தைய நாள் மாலையே நகரிலும், நகருக்கு வெளியிலும் இருக்கும் இந்திய  நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு மனைவி, மகன்கள் சகிதம் சென்று, வாழ்த்துக்களையும் இனிப்பு பதார்த்தங்களையும் வழங்கி, ஒவ்வொரு வீட்டிலும் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த போது மணி பத்து. பால்கனிக்கு சென்று நின்றேன். அங்கே பல வண்ண வானவேடிக்கைகளில்லை. கண்கவர் மத்தாப்பூக்கள் உண்டாக்கும் வளையங்களைக் காண முடியவில்லை. வெடிச்சத்தம் சிறிதும் இல்லை. அமைதி, எங்கும் அமைதி. காதைச் செவிடாக்கும் அமைதி!  தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடக் கூட்டம் இல்லை. அந்த விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லை. ஆர்பாட்டங்கள் இல்லவே