இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் தேன்குழல் சிறுகதைத் தொகுப்பு - அகநாழிகை வெளியீடு

படம்
இ துகாறும் நான் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பை ' அகநாழிகை பதிப்பகம் ' வெளியிட இருக்கிறது.  இந்த நற்செய்தியை நண்பர்களிடம்  பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். தொகுப்பிலுள்ள  பெரும்பான்மையான சிறுகதைகள் வல்லமை இதழில் வெளிவந்தவை. வல்லமை என் முகவரியின் முதல் வரி என்றால் அதில் துளியும் மிகையில்லை.  சில சிறுகதைகள்  சொல்வனம், திண்ணை மற்றும் சிறகு இதழ்களில் வெளியானவை. ஓரிரு கதைகள் பிரசுரமாகாதவை .  உண்மையில் நான் ஒரு வாசகன் மட்டுமே. என் எழுத்து ஒரு கிளைவிளைவே. என்னுடைய நண்பர்கள் குழுவில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதாக எண்ணிவிடலாம். இலக்கிய உலகிலும் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற ஏகலைவன்களுக்கு, துரோணர்களின் புத்தகங்களே குருநாதர்கள்.  எனக்குத் தெரிந்த பலர் புத்தகத்தை எடுத்தால், வெகுவிரைவாக படித்து முடித்து விடுகிறார்கள். என்னாலெல்லாம் அவ்வளவு வேகமாக வாசிக்க முடியாது. ஒரு புத்தகத்தைப்  வாசித்துக்கொண்டு இருக்கும் போதே பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அதன் பின்னால் கிடுகிடுவென சிறிது நேரம் ஓடினால், அது தொடர்பான கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் என் முன்னே வந்து கொட்டும்.

அம்மாவின் தேன்குழல் - என் முதல் சிறுகதைத் தொகுப்பு

புகைவண்டிகள்

க டுங்குளிர். இன்று காலை ஒருவித இறுக்கத்தோடு பேருந்தைப் பிடிக்க நடந்து சென்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு குட்டிப் பெண் தன் தாயின் கையைப் பிடித்தபடி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். என் மகனின் நினைவு வந்தது. இந்தக் குளிரில் குழந்தைகளுக்கு என்ன பள்ளி வேண்டிக்கிடக்கிறது என்று தோன்றியது. அந்தக் குழந்தை வானத்தைப் பார்த்தபடி வாயிலிருந்து புகை விட்டுக்கொண்டே சென்றாள். அவளைக் கடக்கும் போது பார்த்து புன்னகைத்து, 'ஹுய மார்கன்' என்றேன். 'ட்ரேன்..ட்ரேன்..' (புகைவண்டி) என்றாள். இந்தக் குழந்தைக்குப் புகைவண்டியைப் பற்றி எப்படித் தெரியும் என்று யோசித்தேன். என் மகன் அடிக்கடி பார்க்கும் 'ஆங்கில எழுத்துக்களை' பெட்டிகளில் எடுத்துச் செல்லும் புகைவண்டியின் நினைவு வந்தது.  சில நொடிகளில் என்னையும் அறியாமல் நானும் வானத்தைப் பார்த்தபடி புகை விட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். எத்தனை அருமையான விளையாட்டு!! குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது என்று தோன்றியது. குழந்தையாக மாறிவிட வேண்டும் என்று தோன்றியது. இறுக்கம் நீங்கி புத்துணர்வு பெற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பேருந்து ந