இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏற்புரையிலிருந்து..

படம்
அ ம்மாவின் தேன்குழல் புத்தக வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய ஏற்புரையில் இருந்து ஒரு பகுதி: இ து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா ஏற்புரை என்பதால், ஒரு கதை சொல்லி என்னுடைய ஏற்புரையைத் தொடங்க இருக்கிறேன்.  இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு ஒரு பெரியவர் சாலையோரக் கடை ஒன்றின் சுவரை ஒட்டி இன்னொரு சுவரெழுப்பி, மேடை அமைத்து தேநீர்க்  கடை ஒன்றை நடத்தி வந்தார். அங்கு அன்றாடம் பல வாடிக்கையாளர்கள் தேநீர் பருக வருவார்கள். வந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இசுலாமியர்கள். அந்தத் தாத்தாவும் எப்போதும் வெள்ளை ஜிப்பா அணிந்து பார்ப்பதற்கு ஒரு இசுலாமியரைப் போலவே இருப்பார். உருது மொழியிலும் சரளமாகப் பேசுவார். அங்கு வரும் இசுலாமியப் பெரியவர்கள் சிலர், 'எல மாத்தி டீ போடு பாய்!' என்று கேட்பார்கள். சில சமயம் அதற்குச் சம்மதித்து புது இலையில் தேநீர் போட்டுக் கொடுப்பார். சில சமயம் 'இப்போதான் மாத்தினேன் பாய்' என்று கூறி மறுத்துவிடுவார். அந்தத் தாத்தாவுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் பேரன் ஒருவன் இருந்தான். அவன் மாலைவேளைகளில் பள்ளி விட்டவுடன் நேராக அவனுடைய தத்தாவின் தேநீர்க

அம்மாவின் தேன்குழல் - புத்தக முன்னுரை

படம்
'அம்மாவின் தேன்குழல்' புத்தக முன்னுரையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ள சொல்வனம் இதழுக்கு என் நன்றிச்செண்டு! நண்பர்கள், புத்தக முன்னுரையை இங்கே வாசிக்கலாம்.. http://solvanam.com/?p=37755 இணையம் வழியாக புத்தகம் வாங்க.. http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1832