இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணையாழியின் 34-ஆம் பக்கம்

படம்
வி டுமுறை கழிந்து பெல்ஜியம் வந்து சேர்ந்தவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்:  "கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது." சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.   ' Kanayazhi of Feb carries an article on your short story collection ' என்று எழுதியிருந்தவர் தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரலும், மூத்த கலை விமர்சகரும், எழுத்தாளருமான  திரு. வெ.சா  (வெங்கட் சாமிநாதன்).  திரு.வெ.சா அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம்   கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று   கணையாழி  பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இந்த வரிகளைப் பார்த்தப

ten months ago, you wrote...

படம்
மே ற்படி பொருளுடன் 'Your Journal Awaits' என்று பென்சுவிலிருந்து (Penzu) கடந்த மாதம் 26-ஆம் தேதி வந்திருந்த மின்னஞ்சலை இப்போதுதான் பார்த்தேன். உடனே பென்சுக்கு சென்று என்னுடைய நாட்குறிப்பேட்டை சற்று நேரம் புரட்டிவிட்டு, மார்ச் மாதம் 26-ஆம் தேதி எழுதிவைத்திருந்த குறிப்புகளை வாசித்தேன். 'பார்வை' என்று தலைப்பும் வைத்திருக்கிறேன்.  (பென்சு நாட்குறிப்பேட்டிலிருந்து..) இதை எழுதியதற்கு இரண்டு மாதங்கள் கழித்து, என் மனைவி, மகனுடன் வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவிற்கு சென்றிருந்தபோது இந்தக் காட்சி நினைவுக்கு வந்ததால், வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து என்னைச் சுற்றி நடப்பதையெல்லாம் 'கேட்டுக்கொண்டிருந்தேன்' - வானவில் உட்பட. அன்று மாலை நாட்குறிப்பில் எதுவும் எழுதவில்லை. 'நிறங்கள்' கதையை எழுதி வல்லமைக்கு அனுப்பிவிட்டேன். அதுவும் ஒரு 26-ஆம் தேதி அன்று வெளியாகியிருக்கிறது. நிறங்களிலிந்து சில வரிகள்: "காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்

சின்ன விஷயங்களின் மனிதனுடன்..

படம்
' வ ண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது' போன்றது என்று நண்பர்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன்.  புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ' சின்ன விஷயங்களின் மனிதன் ' புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்?  புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறு விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பை அப்படி ரசித்து ருசித்திருக்கிறேன். அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்: "யானையைக் கூட அடிக்கடி பார்க்க முடிகிறது மாதக் கணக்காயிற்று மண்புழுவைப் பார்த்து." எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்! இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்? ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனை