இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"Like your Papa giving.."

(மீள்நினைவு) அ ப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு; ஒன்பதாகவும் இருக்கலாம். அது இப்போது முக்கியமில்லை. எங்கள் தெருவில் திருவிழாவோ அல்லது அண்டை வீட்டில் வேறு ஏதோ ஒரு நிகழ்வோ என்று நினைக்கிறேன். ஒலிப்பெருக்கியில் எல்.ஆர். ஈஸ்வரி உரத்த குரலில் மாரியம்மன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். எனக்குக் காலாண்டு தேர்வோ அல்லது அரையாண்டு தேர்வோ நடந்து கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி என்னைப் படிக்க விடாமல் சதி செய்து கொண்டிருந்தார். விழாக்குழுவினருக்கு தேர்வைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கொண்டாட்டம் அவர்களுக்கு முக்கியம். தேர்வு நாட்களில் மாணவர்களெல்லாம் தவ நிலையில் இருக்கும் முனிவர்களைப் போன்றவர்கள். அந்த சமயத்தில்தான் இதுபோன்ற திருவிழாக்களும், கிரிக்கெட் போட்டிகளும், சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்களும் அப்சரஸ் அழகிகளான ரம்பை, மேனகை, ஊர்வசி போன்று மாணவர்கள் முன்பு தோன்றி, தவத்தைக் கலைக்க நடனமாடுவார்கள். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போதெல்லாம் அப்படி ஒரு முனிவனாய் என்னை நான் உ

லாக்கப்.. விசாரணை.. தடம்..

படம்
லா க்கப் நாவலும், விசாரணை திரைப்படமும் தெரியும். அது என்ன தடம்? லாக்கப் நாவலை இன்னும் வாசிக்கவில்லை. எங்கும் விசாரணை பற்றிய பேச்சாய் இருப்பதால் மிகுந்த ஆவலுடன் இன்று விசாரணை படம் பார்த்தேன். ஆந்திரத்தில் பூங்காவில் தங்கி பிழைப்பு நடத்தி வரும் மூன்று தமிழக இளைஞர்களை காவல்துறையினர் ஒரு விசாரணைக்காக அழைத்து செல்கிறார்கள். படத்தின் ஒன்பதாவது நிமிடம், காவல்நிலையத்தில் ஒரு அதிகாரி தனக்கு ராசியானதொரு லத்தியைத் தேர்ந்தெடுத்து அந்த இளைஞர்களை விளாச ஆரம்பித்த கணம் வரைதான் நான் படத்தோடு இருந்தேன். அதன் பிறகு என் மனம் தடம் மாறி திலீப் குமார் அவர்களின் 'தடம்' சிறுகதைக்குள் விழுந்துவிட்டது. தடம் சிறுகதையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு போராளி லாக்-அப்பிற்குள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளையும், அத்தருணத்தில் அவனுடைய மனவோட்டத்தையும் செறிவாக பதிவு செய்திருப்பார் திலீப். விசாரணைக்கும் தடத்திற்கும் இருக்கும் ஒற்றுமை லாக்-அப்பிற்குள் விசாரணையின் பெயரால் குற்றவாளிகள் சந்திக்கும் சித்திரவதைகளும் அதிகாரிகளின் குரூரமும்தான். தடம் சிறுகதையை வாசித்திராதவர்களை விசாரணை நிச்சயம் பாதித்திருக்

காடுகளாகும் நாடுகள்..

க டந்த வாரம் நண்பன் விக்ரம் பெல்ஜியத்திற்கு வந்திருந்தான். கடைசியாக அவனை 2010-இல் பார்த்தது. வியாழனன்று மாலை அவனுடன் ப்ரசல்சு நகர மையத்திலுள்ள கிராண்ட் ப்ளாசிற்குச் சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்களும், காவலர்களும் ஆயுதமேந்தியபடி திரிந்துகொண்டிருந்தார்கள். ஒன்றும் புரியவில்லை. ஓரிருவர் என்னையும் என் நண்பனையும் கூட சந்தேகக் கண்ணோடு பார்ப்பது போன்று எங்களுக்குத் தோன்றியது. கார்களைக் கூட அனுமதிக்காததால் சற்றுத் தொலைவில் நிறுத்திவிட்டுச் செல்ல  வேண்டியிருந்தது. என்ன நடக்கிறது ப்ரசல்சு நகரில் என்று நினைத்தேன். க்ராண்ட் ப்ளாசிற்கே உரித்தான அந்த உயிரோட்டமே இல்லை. எனக்கு நெருடலாக இருந்தது. பாரீஸ் நகர தாக்குதலுக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டது, வழக்கமாக இப்படி இருக்காது என்று என் நண்பனிடம் கூறினேன். அடுத்த நாள் மாலை அப்தேஸ்லாம் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அப்தேஸ்லாம் பதுங்கி இருந்த இடம் மையத்திலிருந்து நீண்ட தூரமில்லை.நேற்றைக்கு இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு! இந்தத் தாக்குதலை கடந்த வாரமே அறிந்திருந்த பிரசல்ஸ் நகரம் மௌனமாக அழுதுகொண்டிருந்ததாகவே எனக்கு இப்போது தோன்றுக

தீனன் நூலகம் (Tienen Bibliotheek)

படம்
செ ன்ற வாரம் தீனன் (Tienen) நகர குழந்தைகள் நூலகத்துக்கு என் மகனுடன் சென்றிருந்தேன். உண்மையில் குழந்தைகளுக்கான இதுபோன்றதொரு நூலகத்தை இதுவரை நான் கண்டதில்லை. இலக்கியம், தகவல் களஞ்சியங்கள், புதிர்கள், விளையாட்டு, பாட புத்தகங்கள் என்று வயதுவாரியாக அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது தவிர எண்ணற்ற குழந்தைத் திரைப்பட மற்றும் விளையாட்டு டி.வி.டி-கள், ப்ளூரே தகடுகள். நான் சிறுவயதில் பார்த்த ஹோம் அலோன், ஜுமாஞ்சி திரைப்படங்களிலிருந்து சென்ற வருடம் வெளியான தி குட் டைனசார் வரை அனைத்து திரைப்படங்களும் கிடைக்கிறது. எதை எடுப்பதென்றே தெரியாமல் ஒரு பத்து படங்கள் எடுத்து வந்தோம். ஒவ்வொரு குழந்தையும் பத்து டி.வி.டி-கள், இருபது புத்தகங்கள் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஒரு மாதத்திற்குள் திருப்பித் தந்துவிட வேண்டும். தாமதமானால் அபராதம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு நாளைக்கு 5 சென்டுகள் (மூணரை ரூபாய்). எடுத்துவந்த புத்தகங்களில் அதற்குள் நான்கு புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டான் என் மகன். அவன் வாசிக்கும் வேகம் எனக்கே பிரமிப்பூட்டுகிறது. அவனுடன் அமர்ந்து படிப்பதற்காக இந்தப் புகைப்படத்திலுள்ள பு

இருளிலிருந்து - கு.ப.ரா

க்ஷ ண சுகத்திற்குப் பிறகு ஏற்பட்ட அந்த ஆழ்ந்த வெறுப்பு அவருடைய உள்ளத்தைக் கிளறிவிட்டது. யசோதை அப்படியே தூங்கிவிட்டாள். சித்தார்த்தனுக்குத் தூக்கம் கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து அறையில் உலவினார். சுகத்தைப் பற்றியும் துக்கத்தைப் பற்றியும் அவர் எண்ணங்கள் மேன்மேலும் உயர்ந்து கிளம்பின. ஆரோக்கியமும் யௌவனமும் சுகபோதை கொடுக்கும் மதுவாக இருக்கின்றன. எது நிரந்தரம்? சுகம் நிச்சயமாக நிரந்தரமன்று; ஆனால் துக்கமும் நிரந்தரமன்று. சுகமென்னும் வெள்ளப்பெருக்கு எப்பொழுதும் துக்கமென்ற சாகரத்தில் போய்த்தான் முடிவடைகிறது. சுகமே துக்கத்திலிருந்துதான், சிரமத்திலிருந்துதான் உற்பத்தியாகிறது. சொல்லப்போனால். சுகம் நிச்சயமில்லை. நோய், மூப்பு, மரணம் இவை நிச்சயம். சுகம் கொஞ்சம்; துக்கந்தான் அதிகம். எதற்காக இந்தத் தாரதம்மியம்? சுகம் ஏன் நசிக்கிறது? துக்கம் ஏன் நீடிக்கிறது? துக்கம் ஏன் சதா சுகத்தின் இறுதியில் மாலையின் இறுதியில் மையிருட்டுப் போல் தென்படுகிறது? துக்கம் தொலையக் கூடியதா? துக்கமற்ற சுகம் உண்டா? அது எது? "யசோதரையிடம் நான் பெறும் இன்பம் நீடிக்கவில்லை, ஏன்? யசோதரையின் அழகே இன்பத்திற்குக் கா