இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்

படம்
ஒ ரே சமயத்தில் உயரத்திலிருந்து கீழே விடப்பட்ட வெவ்வேறு எடைகொண்ட பொருட்கள் தரையைத் தொட எடுத்துக் கொள்ளும் நேரம் அவற்றின் எடையைப் பொறுத்தது என்கிறது அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்புத் தத்துவம். இது தவறு என்பதை நிரூபிக்க கலிலியோ நானூறு வருடங்களுக்கு முன்பு பைசா சாய்ந்த கோபுரத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு கோளங்களை விழச் செய்து காட்டியதாக அவருடைய மாணவர் வின்சென்ஸோ பதிவு செய்துள்ளார். காற்றுத் தடை காரணமாகவே குறைந்த எடையுள்ள பொருட்கள் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன என்றும் மேலும் வெற்றிடத்தில் விழச் செய்தால் அவை சீரான வேக மாற்றத்தோடு ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று அப்போதே கணித்திருக்கிறார். என் கல்லூரி நண்பன் அனுப்பி இருந்த பிரையன் காக்சின் இந்த பி.பி.சி காணொளியின் 3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்தான் என் கண்களுக்குத் தெரிகிறார்கள். Look at that! Exactly. Brilliant. (முகநூல் பதிவு: 11 பிப்ருவரி 2016)

குழந்தைகளால் நிரப்புக..

எ ன் மகனுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்களும் பெல்ஜியர்களும்தான். அவனுடைய உற்ற நண்பர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் பாகிஸ்தானியர்களே. அதிலும் அவன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் - 'ஹசன்'. அவனும் பாகிஸ்தானியனே. பெல்ஜியத்தில் பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அதுவும் அரைமணிநேரம் மட்டுமே மதக்கல்வி போதிக்கப்படுகிறது. கிறித்தவம், இஸ்லாம் என்று எதை வேண்டுமானாலும் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மதக்கல்வி விரும்பாதவர்கள் 'நல்லொழுக்க வகுப்பைத்' தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என் மகன் நல்லொழுக்க வகுப்புக்குத்தான் செல்கிறான். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹசன் இவனிடம், 'நீ ஏன் நல்லொழுக்க வகுப்புக்குச் செல்கிறாய். உன் நாட்டில் கடவுளே கிடையாதா?' என்று கேட்டிருக்கிறான். அதற்கு என் மகன், 'என் நாட்டில் நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கடவுள்களைப் பற்றியெல்லாம் நம் பள்ளியில் சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். அதனால்தான் நான் நல்லொழுக்கம் படிக்கிறேன்' என்று கூறியிருக்கிறான். அதற்கு ஹசன் இவனிடம், 'அப்படியானால் நாம் போய் ஆசிரியரிட

லு.. டோ.. வி.. கோ.., கோ.. டோ.. வி..லு.., க..ட..வு..ள்..

படம்
' அ ன்டூஷாப்லே ' (Intouchables) என்கிற பிரெஞ்சுப் படத்தைப் பற்றியும், குறிப்பாக அதன் பின்னணி இசை பற்றியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தோழா' திரைப்படம் அன்டூஷாப்லேவைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறுகிறார்கள். தழுவல் மட்டுமா என்பதை நீங்களே பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள். நான் சொல்ல வந்தது அந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்த 'லுடோவிகோ எநௌடி ' (Ludovico Einaudi) எனும் இசை மாமேதையைப் பற்றி. கடந்த வருடத்தில் பல இரவுகள் எனக்கு லுடோவிகோ எனும் கடவுளால்தான் நகர்ந்திருக்கிறது. 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றித் தெரியாது. ஆனால் நோய் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித்திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய எழுதி வைத்திருக்கிறேன். நிச்சயம் விரைவில் வெளியில் வரும். டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில்

Fear no more..

இ ன்றைக்கு தீனன் நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் 'கம்ப்ளீட் வொர்க்ஸ்' புத்தகம் பார்த்தேன். என் தந்தையின்புத்தக அலமாரியிலும் இந்தப் புத்தகம் இருந்தது. இன்றைக்கும் தேடினால் பரணில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியிருக்கிறேன். ஆனால் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் அருள் ஜோசப் 'Fear no more..' கவிதையை உணர்ச்சிகரமாகத்தான் சொல்லிக்கொடுத்தார். அதில் வரும் chimney sweepers பற்றியெல்லாம் மிக அருமையாக விளக்கம்   கொடுத்து அவர் பாடம் நடத்தினாலும் அந்த விஷயங்களெல்லாம் என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாததால் என்னை அது பாதிக்கவில்லை. அருமையான ஆசிரியர். பாட புத்தகத்திலல்லாத பாடல்களையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அப்போதெல்லாம் நான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்த ஒரேயொரு ஆங்கிலப் பாடல் அவர் சொல்லிக்கொடுத்த 'Flying high high.. I am a bird in the sky' பாடல்தான். அது இன்னும் நினைவிலிருக்கிறது. இதுவே அவரின் வெற்றி. 'Fear no more..' எனக்கு மகாகவியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலைத்தான் நி

எனது போராட்டமும் சில படிப்பினைகளும்..

படம்
மு தலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும். இனி இந்தக் கட்டுரையில் நான்  எழுதி  இருப்பது - என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியும்.   'கேபி ஓல்ட்ஹவுஸ்' என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி 'டின்னிட்டஸ்' (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப்  பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் கடந்து செ