இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்

பொ ள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.லோகமாதேவி அவர்கள் என்னுடைய " முடி " சிறுகதையை வாசித்துவிட்டு எழுதிய கடிதம். ஜெயமோகன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னை அறிந்திருக்கிறார். முடி சிறுகதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு நீண்டதொரு விமர்சனம் எழுதியதற்கு அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி! இனி.. லோகமாதேவி அவர்களின் விமர்சனம்:  “ முடி ” படித்தேன். நீண்ட கதையாக நேற்று தோன்றியது இன்று ஆழ்ந்து படித்த போது மிகவும் சிறியதாகி, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா எனும் உணர்வை தோற்றுவித்தது.  முதலில் இந்தக் கதைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், உங்களின் எழுத்து நடை மிக வித்தியாசமான ,நேரடியான ஆனால் ஒரு சீரோடு அழகாகனதாய் இருக்கிறது. ஜெயமொகன் அவர்களின் மொழி நடைக்கும், தற்போது அதிகம் படிக்கும் காட்சன் மற்றும் ஷாகுல் அவர்களின் மொழிநடைக்கும்  உங்களின் இந்த style-க்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது.  ஷாகுல்  எழுத்துக்களில் குமரித்தமிழ் மணக்கிறது, காட்சனின் நடையிலோ விவிலியத்தின் செல்வாக்கு புலப்படும். உங்கள் மொழி நடை மி

ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு

அ ன்பு ஜெயமோகன்,  அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப்  பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.   "ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு" ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.    அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக் கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள் , அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற்றைப் பற்றியும் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே செல்கிறார்.   அவருடைய பெற்றோர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்ததுதா

ஒரு கட்டுரை.. ஒரு கனவு..

படம்
சு ஜாதா தன்னுடைய அம்பலம் இணைய இதழில் பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய குறுங்கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான விஷயங்களைப் பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் இடையில் சுஜாதாவைக் கையில் எடுத்துக்கொள்வேன். மனதை லேசாக்கிவிடும் சக்தி படைத்தது அவருடைய எழுத்து. அவருக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை. இந்தக் குறுங்கட்டுரையில் அவர் அதற்கு முந்தைய வாரம் விகடன் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்கு எழுபது வயதானதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி எழுதியிருந்தார். தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டுக்கள் குவிந்ததாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு அது சுஜாதா எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஜெ-யின் மனைவி அருண்மொழி அதை 'சோகமும் வருத்தமும் நிரம்பிய எழுத்து' என்று கூறினாராம். 'ஹாய்' மதன் தனக்கு எப்போது இப்படியெல்லாம் எழுத வரும் என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா 'எழுபது வயதானதும்' என்று கூறியிருக்கிறார். இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவின் மரணத்தோடு தொலைத்துவிட்டது.