Fear no more..

ன்றைக்கு தீனன் நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் 'கம்ப்ளீட் வொர்க்ஸ்' புத்தகம் பார்த்தேன். என் தந்தையின்புத்தக அலமாரியிலும் இந்தப் புத்தகம் இருந்தது. இன்றைக்கும் தேடினால் பரணில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியிருக்கிறேன். ஆனால் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் அருள் ஜோசப் 'Fear no more..' கவிதையை உணர்ச்சிகரமாகத்தான் சொல்லிக்கொடுத்தார். அதில் வரும் chimney sweepers பற்றியெல்லாம் மிக அருமையாக விளக்கம் கொடுத்து அவர் பாடம் நடத்தினாலும் அந்த விஷயங்களெல்லாம் என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாததால் என்னை அது பாதிக்கவில்லை. அருமையான ஆசிரியர். பாட புத்தகத்திலல்லாத பாடல்களையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அப்போதெல்லாம் நான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்த ஒரேயொரு ஆங்கிலப் பாடல் அவர் சொல்லிக்கொடுத்த 'Flying high high.. I am a bird in the sky' பாடல்தான். அது இன்னும் நினைவிலிருக்கிறது. இதுவே அவரின் வெற்றி.

'Fear no more..' எனக்கு மகாகவியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலைத்தான் நினைவுப்படுத்தியது. ஷெல்லியின் காதலன் தனது அச்சமில்லையை எழுதுவதற்கு ஷேக்ஸ்பியரின் இந்தப் பாடலே தூண்டுதலாக இருந்திருக்கவேண்டும். இருந்தாலும், பாரதியின் வீச்சும் வீரியமும் எனக்கு ஷேக்ஸ்பியரில் கிடைக்கவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கடுங்குளிரில் வெளியே சென்றுவிட்டு திரும்பும்போதுதான் எனக்கு ஷேக்ஸ்பியரின் 'Nor the furious winter’s rages' வரியில் இருக்கும் அந்த rage-ஐ உணர முடிகிறது.

I badly want sunshine!

(முகநூல் பதிவு: 19 மார்ச்சு 2016)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..