இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பயணி..

படம்
இ ந்தப் புகைப்படங்களை எடுத்த நாள் இன்றும் நன்றாக நினைவிலிருக்கிறது . சென்னை ஆழ்வார்பேட்டையில் மாடல் போட்டோகிராபர் தாமஸுடைய ஸ்டூடியோவில் எடுத்தது . அன்றைக்கு மட்டும் என் மேல் முன்னூறு பிளாஷ்களாவது விழுந்திருக்கும் . காலை ஏழரை மணிக்கு ஸ்டுடியோவுக்குள் நுழைந்தவன் இரவு உணவுக்கு பின்பே வெளியே வந்தேன் . கிட்டத்தட்ட பதினான்கு மணிநேரங்கள் ஒளிமழையில் நனைந்துகொண்டிருந்தேன் . வீட்டுக்குச் சென்று பொத்தென்று மெத்தையில் விழுந்து அப்படியே தூங்கிவிட்டேன் . இப்போதெல்லாம் தெருவுக்கு ஒரு மாடல் போட்டோகிராபர் இருக்கிறார் . அப்போதெல்லாம் நிறைய பேர் கிடையாது . சென்னை மாநகரில் மொத்தமாகவே ஒரு பத்து பேர்கூட இருக்கமாட்டார்கள் . அப்போதே வெங்கட்ராம் மற்றும் தாமஸ் ஆகியோர் பிரபலமானவர்கள் . இன்றைக்கும் வெங்கட்ராம்தான் மணிரத்னத்தின் ஆஸ்தான போட்டோகிராபர் . அவருடைய ஸ்டூடியோவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன் . என்னுடைய நண்பர் பாபு அங்குதான் தன்னுடைய போர்ட்போலியோவை எடுத்துக்கொண்டார் . நான் தாமஸிடம் சென்றுவிட்டேன் . இன்றைக