இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புறங்கூறாமை எனும் அறம்..

படம்
ப ள்ளி, கல்லூரி மாணவர்களிலிருந்து, தம்பதிகள், நிறுவன உயரதிகாரிகள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் ஒரு பயிற்சியாளனாக இருப்பதால், என்னைப் பொறுத்தவரையில் சொல்வதைச் செய்வதும் அல்லது செய்துவிட்டுச் சொல்வதும், என்னுடைய செயல்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதும்,  சுய மேன்மையை நோக்கிச் செல்லத் தொடர்ந்து கடினமாக முயற்சிப்பதும் (personal excellence) இன்றியமையாததாகப்  படுகிறது. அதற்கான மெனெக்கெடலும், போராட்டமும்தான் என்னை இப்போதைக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் நிறைய நண்பர்களைத் தொலைத்துவிட்டதும் உண்மை. உதாரணத்துக்கு , 'Gossip' சார்ந்த என்னுடைய  கொள்கைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு 'Sapiens' என்கிற புத்தகம் பற்றி என்னுடைய " இந்தியா குறித்த ஏளனம் " பதிவில் எழுதியிருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம் அது. பல நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரை செய்தேன்; மன்றாடினேன் என்றுதான் சொல்லவேண்டும். யாரேனும் இதுவரை வாங்கினார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதே நண்பர்களில் ஒருவர் சமீ

சூப்பர்மேன் நினைவுப் படிகம்

படம்
(மாணவர்களுக்கான 'தினமலர் பட்டம்' இதழுக்காக எழுதியது) சௌ தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆப்டோ-எலக்ட் ரானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் (Optoelectronics Research Centre) சேர்ந்த விஞ்ஞானிகள் பல பில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் நீடித்திருக்கும் திறன் கொண்ட தரவு சேமிப்பகத்தை உருவா க்கி டிஜிட்டல்  தரவு சேமிப்பில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளார்கள்.    நன்றி: சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் அதிவேக (ஃபெமடோசெகண்ட்) லேசர் ரைட்டிங் மூலம் ஐந்து பரிமாணத்  தரவுகளை  கண்ணாடியில்  பதிக்கவும், மீட்கவும் செயல்முறைகளை உருவாக் கியுள்ளார்கள். குவார்ட்ஸ் கண்ணாடியில் உருவாக்கப்பட்ட நானோ கட்டுமானங்களினூடே இந்தத் தரவுகள் பதியப்படுகின்றன. ஒரு படிகத்தில் 360 டெராபைட்டு தரவு கொள்திறன் கொண்ட இந்த 5-D சேமிப்பகம் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங் கக்கூடிய அளவிற்கு வெப்ப உறுதித்தன்மை கொண்டது. அறை வெப்பநிலையில் 13.8 பில்லியன் ஆண்டுகள் வரை அசராமல் இருக்குமாம். நன்றி: சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம் "மனித குலத்தைப் பற்றிய அத்தனை ஆவணங்களையும், தகவல்களையும் இந்தத் தொழில்நுட்பத்தின

காந்தியம் தோற்கும் இடங்கள்

படம்
இ ரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான், என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட என்னை காந்தியவாதியாக பாவித்தார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. வரலாற்றுப் புத்தகங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்துப் படுத்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே. எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாகதான் இருந்தது; அவர்மீதான விமர்சனங்கள் ஏராளம் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழு

மொத்தக் குருதியாலும்..

படம்
ஜெ யமோகனின் " இந்த இரவு இத்தனை நீளமானதென்று... " என்று ஒரு கவிதை. எனக்கு எட்டு வயதிருக்கும்போது அவர் எழுதிய கவிதை இது. என்னுடைய முப்பத்தெட்டாவது வயதில் அவருக்கு அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். அதை அவருடைய தளத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தக் கடிதம் உங்கள் வாசிப்புக்கு.  அ ன்பு ஜெயமோகன், "தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது." என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய  "இந்த இரவு இத்தனை நீளமானதென்று..." கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, ஒரு கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.    2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி வங்கியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலிருந்த உட்லேண்ட்ஸ் ட்ரைவ்-இன் உணவகத்துக்கு உடன்பணிபுரியும்  நண்பர்களு

சித்தி (Siddhi)

படம்
இ லக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் 'சிறுகதை'. இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் சிறுகதை என்றால் சிறிய கதை என்றே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடும். 'சிறுகதை என்றால் என்ன?' என்பதை பல இலக்கிய மேதைகள் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை ஓரளவுக்கு வாசித்துவிட்டேன் போலிருக்கிறது என்று நினைத்துப் பெருமிதம் கொள்ளும் பொழுதெல்லாம் "கல்லாதது உலகளவு" என்று யாரேனும் வந்து என் தலையில் கனமாகக் குட்டுகிறார்கள். கடந்தமுறை அதைச் செய்தது சகோதரர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள்.  வழக்கமாக இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் நிறையப் புத்தகங்கள் வாங்கி வருவேன். அதற்கென்றே தனியாக ஒரு பெட்டியை ஒதுக்கிவிடுவதுண்டு. ஏற்கனவே வாங்கி வந்த புத்தகங்களே நிறைய வாசித்து முடிக்கப்படாமல் இருந்ததால், அந்த முறை புத்தகக் கடைகளுக்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு வந்து புத்தகக் கடைகளுக்குப்  போகாமல் திரும்பியது அநேகமாக அதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வாசு அவர்கள் நிறைய புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார். "உங்களுக்காக நான் எடுத்து வைத்த

குதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்

படம்
இ ரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. என் வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் " ஹோட்டல் காஸ்ஆனஸ் ".    ஹோட்டல் காஸானஸ் "ஆனஸ்" என்பது ஆசனவாயேதான் (Anus). "என்னக் கொடுமை இது?" என்று உங்கள் முகம் கோணுவதை என்னால் டெலிபதியின் உதவியுடன் உணரமுடிகிறது. "மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது" என்று எண்ணும் அளவிற்கு, ஒரு புறம் ஆளுயர ஆசனவாயைக் கொண்ட அந்தப் பாரிய பெருங்குடல் மாதிரியை வடிவமைத்தவர் 'யூப் ஃபன் லீஸ்ஹௌட்' என்கிற டச்சு வடிவமைப்பாளர்.  விடுதிக்குள் ஒரே ஒரு அறைதான். எனவே ஒரு சமயத்தில் ஒரு விருந்தினர் மட்டும் தனியாகவோ அல்லது அவரது குடும்பத்துடனோ  தங்க முடியும். பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளின் திருமண இரவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக அவர்களின் நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ வாடகைக்கு எடுப்பார்களாம். 'குதவ

கலையில் மடிதல்

படம்
' ஓ ட்டன் துள்ளல்' நடனக் கலைஞரும், நடிகருமான கலாமண்டலம் கீதானந்தன் அவர்களின் மறைவையொட்டி ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் எழுதியிருந்த " கலையில் மடிதல் " பதிவை நேற்று வாசித்தேன். ஓட்டன் துள்ளல் என்பது ஒரு தனிநபர் நடனக் கலை. நேரு இதை "ஏழைகளின் கதகளி" என்று வர்ணித்திருக்கிறார். கேரள மாநிலம் அவிட்டத்தூரில் ஒரு ஆலயத்தில் துள்ளல் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிர் துறந்திருக்கிறார் கீதானந்தன். அதைப் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் இந்த வரிகளை வாசித்துவிட்டு, காணொளியையும் பாருங்கள். It gave me Goosebumps!  " ... நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்கிறார். உயிரிழக்கக்கூடும் என்று தோன்றியிருக்கலாம். ஆகவே பாதி ஆட்டத்தில் திரும்பி ஆட்டத்தை முடிக்கும் முகமாக பாடகரை வணங்கியபடி சரிந்து விழுந்துவிட்டார். அர்ப்பணிப்பு அந்தச் சிறிய செயலில்தான் வெளிப்படுகிறது. மேடையிலேயே விழுந்துவிடலாம். ஆனால் அந்த ஆட்டம் வடிவமுழுமை பெறவேண்டும் என அவர் நினைத்தார். கலைஞர்களுக்குரிய இயல்புகளில் ஒன்று தன் கலைவடிவின் ஒத்திசைவு, முழுமைக்கான அவர்

நிறைகுடம்

செ ன்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலில் தினமும் விருகம்பாக்கத்திலிருந்த என் வீட்டிலிருந்து எம்.ஆர்.சி நகரிலிருந்த அலுவலகத்துக்குச் சென்று வருவது என்பது அன்றாடம் போருக்குச் செல்வதைப் போன்றது. இன்றைக்கு நிலைமை இன்னும் மோசமாகி விட்டிருப்பதை கடந்த முறை சென்னைக்கு வந்தபோது உணர்ந்தேன். தாம்பரத்திலிருந்து காலை கிளம்பி கிண்டி சென்று நண்பர்களோடு உணவருந்தி விட்டு சோழிங்கநல்லூர் செல்வதற்குள் ஒரு நாள் முடிந்து விடுகிறது. என் மனைவியும் அதே நிறுவனத்தில் பணியாற்றியதால் இருவரும் அலுவலகத்துக்கு ஒன்றாகத்தான் சென்று வருவோம். பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல், 'உள்ளே செல்வது மட்டுமே நம் கையில். வெளியே வருவது மேலதிகாரி மற்றும் உலகத்தின் வேறொரு மூலையில் அமர்ந்திருப்பவர்களின் கையில்' என்பது போன்ற சக்கர வியூக வழக்கமெல்லாம் அங்கு கிடையாது. ஐரோப்பிய நிறுவனமாதலால் வேலை-வாழ்க்கை சமநிலைக்கு முக்கியத்துவம் இருந்தது.  அப்போது எங்கள் நிறுவன இயக்குநராக இருந்தவரும் ஒ